முஸ்லிங்களின் சத்தியாக்கிரக போராட்ட பந்தலில் ஜே.வி.பி

மூன்றாவது நாளாக நடைபெறும் கல்முனை முஸ்லிம் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை வலுப்படுத்த பல அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்திருந்த இந்த சத்தியாக்கிரக போராட்ட பந்தலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கைபரப்பு செயலாளர் அப்துல் ரஸாக் ஜவாத் கலந்து கொண்டு ஊடகங்களிடம் பேசினார். மக்களின் சத்தியாகிரக போராட்ட பந்தலுக்கு மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டார். மக்கள் அமோக வரவேற்பை அளித்தனர்.

பந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரஹீப், கல்முனை பள்ளிவாசல் சம்மேளன தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம். சித்தீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் , தேசிய காங்கிரஸ், மற்றும் பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், உலமாக்கள், பெரும்திரலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நூறுல் ஹுதா உமர்
(எமது நிருபர்)