வியாழேந்திரன் மற்றும் கருணா அம்மான் ஆகிய இருவருக்கும் கல்முனையிலிருந்து ஓர் செய்தி.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா அம்மான் ஆகிய இருவருக்கும் ஒரு செய்தியை கல்முனையில் இருந்து விடுக்கின்றோம். எங்கோ இருந்து வந்த நீங்கள் இங்கு ஒற்றுமையாக இருக்கின்ற எங்களை பிரித்து விடாதீர்கள் என நாங்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றோம் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துக் கொண்டு இன்று -21- கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
உங்களது பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக நீங்கள் எடுக்கின்ற இந்த முயற்சி நியாயமானதல்ல என்பதை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கின்றோம்.
எங்களது கல்முனை பிரதேசத்திற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் நாவிதன்வெளி பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளிப்போம்.
இங்கிருக்கின்ற நான்கு தமிழர்களும் நான்கு முஸ்லிம்களும் அடித்துப் பிரண்டால் எங்களுடைய நிலை என்ன என எண்ணிப் பாருங்கள்.
தமிழ் சகோதரர்களே உங்களுடைய கோரிக்கை நியாயமாகவிருந்தால் போராடுங்கள். அநியாயமாக போராடாதீர்கள்.
இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன், என்னுடைய இந்த கல்முனை மண்ணுக்கு எதாவது ஆபத்து வரும் என்றால் முதலில் போகும் உயிர் என்னுடையதாகத்தான் இருக்கும் என தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்jm