காத்தான்குடியில் அறபு மொழியை அகற்ற மாட்டோம் அடம் பிடிக்கும் நகரசபை.

அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை. அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை  காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.