போராட்டத்தை ஆதரித்து 1000 விளக்குகள் ஏந்தி மக்கள் ஆதரவு

போராட்டத்தை ஆதரித்து 1000 விளக்குகள் ஏந்தி மக்கள் ஆதரவு : கல்முனை பிரதேச செயலக பிரச்சினை விஸ்பரூபம் எடுக்கிறது !!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு முன்னேற்றமாக 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு கல்முனையில் உள்ள இளைஞர் அமைப்புக்கள்,தமிழ் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், அரசியல் பிரமுகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பிரதேச மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இயங்க நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது.

அரச உயரதிகாரிகளின் வாக்குறுதிகளையும் நம்பாமல் கல்முனை மக்களின் நியாயமான நீண்டகால கோரிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்