பாசிக்குடா ஹோட்டலில் அரேபியர்களுடன் ஹிஸ்புல்லாஹ் ; ஒருங்கிணைப்பாளர் நாடு திரும்பியதும் விசாரணை

அரேபிய பிரஜைகள் மூவரை மட்டக்களப்பு – பாசிக்குடா ஹோட்டலில் சந்தித்து அவர்களை  நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்ததாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் பிரதான ஒருங்கிணைப்பாளரை விசாரணை செய்ய சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து அந்த ஒருங்கிணைப்பாளரும் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விசாரணைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.