சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி
குழுவினருக்கு குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழங்கிய முன்னாள்  இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் ஒருவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மற்றும் சில இடங்களில் சஹ்ரான் கும்பலுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி வழங்குவதற்கு இவரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமி மொஹிதீன் என்பவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் காணாமல் போயிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அவர் வெடிகுண்டு தொடர்பில் தேர்ச்சி பெற்று ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் குண்டு தயாரிப்பதற்கு உதவிய ஒருவர் தொடர்பில் தகவல் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.