ஆட்டோ ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதம்

இன்று பகல் ஏறாவூரில் இருந்து பெரிய புல்லுமலை -வெலிக்காகண்டி குளக்கட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து  முற்றாக சேதமடைந்துள்ளது.

ஏற்றிச் சென்ற குடும்ப அங்கத்தவர்களை இறக்கி விட்டு வண்டியை அடுத்த பக்கமாக திருப்பி எடுத்து வரும் வேளையிலேயே திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதால் சாரதி உடனடியாக பாய்ந்து வெளியேறியதால்  எவ்வித சேதங்களும் இன்றி தெய்வாதீனமாக பாதுகாக்கப்பட்டனர்.
அதிக வெப்பம் காரணமாக ஏதும் அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது