குண்டுத்தாக்குதல் கை நழுவிப்போன ஆட்சியினை கைப்பற்றமுடியும் என்பதற்காக மேற் கொண்டார்களா?என்ற சந்தேகம் உள்ளது.

முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் மக்களை  உசுப்பேத்தி விடுகின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள்.  அவர்கள் இதனை மேற் கொள்வதனூடாக தாங்கள் தான் ஒட்டு மொத்தமாக  கிழக்கு மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கின்றோம் என்ற சங்கதி சொல்லுகின்ற அல்லது படங்காட்டுகின்றவர்களாக காணப்படுகின்றனர். இதனால் மக்களை ஏமாற்ற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அமீரலி தெரிவித்தார்

கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் தையல் பயிற்சிகளை முடித்துக் கொண்டவர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்  தொடர்ந்து உரையாற்றுகையில்முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும்  உசுப்பேத்தி விடுகின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள்.  அவர்கள் இதனை மேற் கொள்வதன் ஊடாக தாங்கள் தான் ஒட்டு மொத்தமாக  கிழக்கு மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கின்றோம் என்ற சங்கதி சொல்லுகின்ற அல்லது படங்காட்டுகின்ற அரசியல்வாதிகள் எங்கு இருக்கின்றார்கள் என்பதனை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது அரசியல் உறவாக இருக்கலாம் அல்லது தந்தை மகன் உறவாக இருக்கலாம் அல்லது தாய் மகன் உறவாக இருக்கலாம் எவ்வாறாயின  உறவாக இருந்தாலும் ஒரு பொய்யை வைத்துக்கொண்டு எவரையும் ஏமாற்ற முடியாது. அது எப்பாடியாவது வெளிவந்தே தீரும்
இந்த வெடிப்பு சம்பவங்கள்  திட்டமிட்ட சதியாகும் யாரோ இவர்களை கொந்திறாத்து எடுத்து இந்த வேலையானது செய்யப்பட்டிருக்கின்றது. இதனை யார் செய்தார்கள்?  இஸ்லாமிய தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் ஒட்டுமொத்த உறவினை சீர்குலைப்பதற்காக செய்தார்களா? இவ்வாறு செய்தால்தான்  இவர்களை அரசியலில் தோக்கடிக்க முடியம் அல்லது எமது பக்கம் இழுக்க முடியம் இதன் ஊடாகத்தான் கை நழுவிப்போன ஆட்சியினை கைப்பற்றமுடியும் என்பதற்காக மேற் கொண்டார்களா? போன்ற விடயங்களை இந்த மாவட்டத்தில்  இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் தெளிவு வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

வெடிக்க வைத்தவர்கள் முஸ்லிம்கள் இறந்தவர்கள் தமிழ்ர்கள் சிங்களவர்கள் ஆனால் இதன் சூத்திரம் எங்கோ இருப்பவர்கள் கதிரையினை பெற்றுக் கொள்வதற்காகத்தான் இதனை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். மட்டக்களப்பில், கொழும்பில், நீர்கொழும்பில் வெடித்த குண்டுகளுக்கு இறந்தவனுக்கும் தெரியாது எதற்காக வெடித்தோமென்று   இறந்த மக்களுக்கும் தெரியாது  எதற்காக இறந்தோமென்று ஆனால் இதன்புலம் கதிரையை எவ்வாறாவது பிடித்துவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் இதற்குள் மறைந்திருப்பதான  பாரிய சந்தேகம் எமக்கு இருக்கின்றது.

எனவே எனது அன்புக்குரிய தமிழ் உறவுகளே இந்த நாட்டிலே சிறுபான்மை மக்கள் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள் இந்தநாட்டில் ஒற்றைமைப்படாமல்  எதனையும் சாதித்துவிட முடியாது. எனவே நாங்கள் ஒற்றுமைப்பட்டு இந்த வேலைத்திட்டத்தினை   நாடியிருக்க வேண்டும். இவ்வாறு நாடவில்லையென்றால் வாழ்வதிலே பிரயோசனமே கிடையாது. இந்த நாடு இருக்கவேண்டும் நாட்டு மக்கள் இருக்கவேண்டும், இந்த நாட்டில் சமாதானம் இருக்கவேண்டும், நிம்மதி இருக்கவேண்டும் இவ்வாறு இருந்தால் தான் இந்த நாட்டில் நாங்கள் வாழமுடியும். இல்லாமல் எங்களுக்குள் அடிபட்டுக்சண்டையிட்டுக் கொண்டு வாழ்வதில் எவ்வித பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது.
 இந்த மாவட்டத்திலும் சில அரசியல்வாதிகள் அலைந்து  திரிகின்றனர் இதனை எவ்வாறு தூண்டுவது இதனை எவ்வாறு எரியவைப்பதென்று மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும். நாங்கள் பிரிந்திருந்து எதனையும் சாதிக்க மடியாது அன்றிலிருந்து இன்றுவரை இதனைத்தான் கூறிவருகின்றேன். இதனையே தமிழ்த் தலைவர்களும் கூறிவருகின்றனர். நாங்கள் பிரிந்து நின்று எதனையும் சாதித்துவிட முடியாது இது எங்களுடைய மாவட்டம் இதற்காகவே நாங்கள் பாடுபடவேண்டும். எனவே இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க கூடாது. எனவே இந்த விடயத்தில்  நீங்கள் தெளிவான சிந்தனையுடன் இருந்து கொள்ளுங்கள்.
ஏமாற்று அரசியல் செய்பவர்களும் இருக்கின்றார்கள் நம்பிக்கையான அரசியல் தலைவர்களும் உங்களுக்குள் இருக்கின்றார்கள்  அவ்வாறானவர்களை எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களும் இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது இதனை நீங்கள் தெரிவு செய்யுங்கள்.
தையல் பயிற்சி முடிந்த மாணவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்குகின்ற இந்த நிகழ்வினை நாங்கள் கோலாகலமாக செய்வதற்கு எண்ணியிருந்தோம் துரதிஸ்ரவசமாக அன்று அமைச்சராக வந்தநான் இன்று பாராளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன். நான் அமைச்சராக இருக்கின்ற கால கட்டத்தில் இந்த மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள மக்களுக்கு பாராபட்சமின்றி சேவையினை நான் செய்துள்ளேன். இதில் மாற்று கருத்திற்கு இடமில்லை இந்த பணியினூடாக நீங்கள் உங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு உங்களது பிள்ளைகளின் கல்வியில் கரிசினை செலுத்துங்கள் என அன்பாக உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்……பழுகாமம் நிருபர்