பலத்த காற்றுடன் மழை : வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று(16) மாலை ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் மழைபெய்துள்ளது.

பலத்த காற்றின்  காரணமாக மரங்கள் பல முறிந்து வீழ்ந்துள்ளதுடன், வீடுகள் சிலவற்றிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கொல்லநுலை கிராமத்தில் வீடுகள் சிலவற்றிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.