களுவாஞ்சிக்குடியில் உடல்நலத்திற்கு கேடான உணவு விற்பனை.

(துசி)

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இயங்கி வரும் பிரதான உணவகத்தில் சுகாதாரத்திற்கு கேடாக உணவு விற்பனை.

களுவாஞ்சிகுடி பொது சுகாதாரர் எஸ்.ரவிகரன் அவர்களினால் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இயங்கும்  அதாவது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் பல தடவை எச்சரித்தும் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்யப்பட்டு வருவதை அவதானித்து குறித்த உணவகத்திற்கு ஏதிராக தற்காலிகமாக மூடுவதற்கு தொடுக்கப்பட்ட வழக்கு விசாரனையின் போது 13.06.2019ந் திகதி பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 20.06.2019இல் மீண்டும் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிவான் பணித்துள்ளார்.