மட்டக்களப்பின் உயிர்நாடியாகதிகழப்போகும் விளையாட்டு மைதானம்.

கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தால் அமைக்கப்பட்டு வரும் புற்தரையிலானஇம்மைதானம் இனிவரும் காலங்களில் மட்டக்களப்பின் உயிர்நாடியாக திகழும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

கிழக்கிலங்கையில் முதல் தடவையாக உருவாக்கப்பட்டு வரும் புற்தரையிலான முதல்தர கிரிக்கெட் மைதானத்திற்கான இரண்டாம் கட்டபணிகளுக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வுகள்  12.06.2019 அன்று  கோட்டைமுனை விளையாட்டு கிராபத்தின்  தலைவர் இ.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இம்மைதானம் இனிவரும் காலங்களில் மட்டக்களப்பின் உயிர்நாடியாக திகழும் என்று கூறினார் ஏன் என்றால் மாவட்ட அலுவலகம் மிக விரைவில்  பூர்த்தியடைவுள்ளதாகவும் இம்மைதானத்தை சுற்றியே 6 பிரிவுகளாக வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும கூறினார். இதன் போது உரையாற்றிய மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவான் தனதுரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்து மற்றைய கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும் திகழ்வதாக குறிப்பிட்டார் விளையாட்டை மட்டும் கருத்தில் கொள்ளாது சமூக மேம்பாட்டையும் இக்கழகம் கொண்டு செல்வதை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தனதுரையில் அரசாங்கத்தால் செய்யமுடியாத பாரிய வேலைத்திட்டத்தை கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும் செய்துவருவதை பாராட்டியே ஆக வேண்டும் எனவும் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர் இதற்கான பாரிய பங்களிப்பை செய்துவருகின்றனர் விளையாட்டை மட்டும் கருத்தில் கொள்ளாது தம்மை ஒரு சமூக பணியாளர்கள் என்பதை இவர்கள் இனம் காட்டியது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கட்டிடத்திற்கான மாதிரி புகைப்படமும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன்; மைதானத்திற்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீடுகளுக்குறிய 15 பயனாளிகளுக்கு மின்சாரம் பெறுவதற்கான காசோலையும் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலக மட்டத்தில் தமது சிறந்த செயற்பாட்டை வெளிக்கொனர்ந்த கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வீரர்களும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க செயலாளர் சி.காந்தன் பாடசாலை அதிபர்கள் கோட்டைமுனை விளையாட்டு கிராம அங்கத்தவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்