ஹிஸ்புல்லாஹ்வின் கருத்தால் சுதந்திரக்கட்சிக்குள் சர்ச்சை மன்னிக்க முடியாது என்கிறார் எஸ்.பி

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடியில் அண்மையில் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவரை விமர்சிக்கவில்லை எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் எமது கட்சியின் உறுப்பினர். கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர். எனினும் இலங்கையில் மாத்திரமே நாங்கள் சிறுபான்மை உலகில் பெரும்பான்மை என ஹிஸ்புல்லாஹ் கூறியது இந்த சந்தர்ப்பத்தில் ஆபத்தான மக்களை ஆத்திரமூட்டும் கருத்து.
இதனால், கட்சியின் மட்டத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்