தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகாசபைக் கூட்டம்

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையின் விசேட தேசமகாசபைக் கூட்டம் எதிர்வரும் 16.06.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணிக்கு நடைபெறவுள்ளதாக பரிபாலனசபையின் செயலாளர் பொ.டிமலேஸ்வரன் தெரிவித்தார்.

ஆலய பரிபாலன சபையின் தலைவர் முஅருணன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பிலும், ஆலய பரிபாலன சபையில் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கல்விச் செயற்பாடுகளுக்கான திட்ட முன்மொழிவும் இதன் போது சமர்ப்பிக்கபடவுள்ளதாகவும், இவ்விசேட தேசமகாசபைக் கூட்டத்திற்கு அனைத்து இந்துபக்தர்களும் கலந்து ஆலோசனைகளையும், கருத்துக்களையும் முன்வைக்குமாறும் பரிபாலன சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.