பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி கிழக்கு பிள்ளையார் கோவில் இரண்டாம் குறுக்கு வீதி கம்பெரலிய வேலைத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வேலைகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டின் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.புவிதாசன், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வீதி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.