இந்த நாட்டில் அனைவரும் சுற்றாடலை நேசிக்கின்றவர்களாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லாதவிடத்து தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவது போன்று சுத்தமான காற்றினையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகும் என போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில்
இந்த சுற்றாடல் தினம் என்பது அனைத்து நாடுகளும் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பத்காக இந்த தினமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை ஆக்க பூர்வமாகவும் ஆழமாககவும் நாங்கள் பார்க்கவேண்டும் நாங்கள் என்ன விடயம் செய்கின்றோமோ அந்த விடயந்தான் எங்களை வந்தடைகின்றது. நாங்கள் சுற்றாடலை மாசு படுத்தினால் அது வேறுவடிவில் எமக்கு பாதிப்பினை ஆபத்தினை தருகின்ற விடயமாக அது எங்களை வந்தடைகின்றது.
உலகளாவிய ரீதியில் பார்க்கின்ற பொழுது வளி மாசடைதல் என்பது மிகவும் கூடுதலான விடயமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலைக்கு இன்று எமது நாடானது இன்னும் தள்ளப்படவில்லையாயினும், இன்று சீனா போன்ற பல நாடுகளில் சுத்தமான சுவாசத்திற்கான காற்றினை பையில் அடைத்து பணத்திற்க விற்பனை செய்கின்ற நிலைக்கு இன்று அந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி குடிப்பது போன்றதொரு விடயமே இதுவாகும். எனவே நாங்கள் எதிர்காலத்தில் இந்த சுற்றாடல் பாதுகாப்பு விடயத்தில் விழ்ப்புணர்வுடன் செயற்படாவிட்டால் இவ்வாறதொரு நிலமை எமது நாட்டுக்கு உருவாகி நாங்களும் காற்றினை காசுகொடுத்து வாங்கி சுவாசிக்கின்ற ஒரு நிலை ஏற்படலாம்.



