13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம்கூறிய கூட்டமைப்பினர்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கை வந்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து கலந்துரையாடியதுடன் பிரதமருக்கு தலைவர் சம்பந்தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.