சுவாமி விபுலாநந்தரின் பேத்தி காலமானார்!

காரைதீவு  நிருபர் சகா

முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் பேத்தி ஓய்வுநிலை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி கமலாதேவி இராமகிருஸ்ணன் இன்று((9) தனது 76வது வயதில் காலமானார்.


ஓய்வுநிலை மூத்த இலங்கை நிருவாகசேவை அதிகாரி எஸ்.இராமகிருஸ்ணனின்
(முன்னாள் காரைதீவு பிரதேச செயலாளர்)மனைவியான இவர் சரண்யாவின் தாயாராவார்.

சுவாமி விபுலாநந்தரின் சகோதரிகள் இருவர். அமிர்தவல்லி மரகதவல்லி ஆகியோராவர். இவர்களில் அமிர்தவல்லியின் பிள்ளைகளில் ஒருவர் பத்மாவதி ஆவார். சுவாமியின் மருமகளான மறைந்த பத்மாவதியின் மகள்தான் காலஞ்சென்ற கமலாதேவி என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடல் நாளை10) திங்கட்கிழமைஇறுதிமரியாதை அஞ்சலியின்பின்னர் பி.பகல் 4மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.