மாணவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான விழுமியக்கல்வியும், ஆளுமைவிருத்தியும் என்ற தலைப்பிலான தலைமைத்துவப் பயிற்சி மயிலம்பாவெளி கருணாலய தியான மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை(07) ஆரம்பித்த இப்பயிற்சியானது, ஞாயிற்றுக்கிழமை(09) வரை, மூன்று நாட்கள் வதிவிடப்பயிற்சியாக இடம்பெற்றது. இதில் 35மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதனை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உதவியுடன், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளரின் முன்னெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது, தீப்பாசறை நிகழ்வு நடைபெற்றதுடன், மாணவர்களின் கலைநிகழ்வுகள் பலவும் அளிக்கை செய்யப்பட்டன.
இதற்கான அனுசரணைகளை மயிலாம்வெளியில் அமைந்துள்ள இராமதாஸ் ஸ்தாபனம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.