பொத்துவில் பிரதேசபை உறுப்பினர் பெருந்தொகை பணத்துடன் கைது.

பொத்துவில் பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்களுறுப்பினரொருவரை
இலங்கை இரானுவத்தினர் பெருந்தொகைப் பணத்துடன் நேற்று  இரவு கைது செய்துள்ளனர்.

மேற்படி உறுப்பினர் குறித்த பணத்துடன் பயணித்திருந்த வேளையில் பொத்துவில் பிரதேச எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த இரானுவத்தின் சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போதே இலங்கை இரானுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் தேவையொன்றுக்காக தனது சொத்தினை விற்பனைசெய்து திரட்டியெடுத்த பணத்தினையே தன்னுடன் வைத்திருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து அறியக்கிடைக்கிறது.

மேலும் சி.சு.கட்சியின் குறித்த உறுப்பினருக்கெதிராக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் அரச தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாககூறி பணமோசடி செய்தார் என்று சிலரால் அன்மையில் முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கிணங்க பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் தொடுக்கப்பட்ட வழக்கின் சந்தேக நபராக குறித்த உறுப்பினருக்கெதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையிலேயே பெருந்தொகைப் பணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரானுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுறுப்பினர்  தம்வசம் வைத்திருந்த பணம் பயங்கரவாத செயற்பாட்டு பணப்புழக்கத்துடன் சம்பந்தப்பட்டுள்ளனவா என்றகோணத்தில் ஆராய்ந்துவருவதுடன் மேலதிக  விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.
– கிராமத்தான் கலீபா : பொத்துவில்