நீர்கொழும்பு பகுதியில் வீட்டில் இருந்து 402 ஐபோன், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் மீட்பு.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடு

ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்று (07) காலை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்து 402 ஐபோன், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட சில தொடர்பாடல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குறித்த வீட்டில் தங்கியிருந்த 2 இலங்கையர்கள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது