இன்று 1200பக்தர்களுடன்சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு சடங்கு!

(காரைதீவு  நிருபர் சகா)

காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்பாளின் வருடாந்த  தீமிதிப்பு சடங்கு உற்சவம்  இன்று வெள்ளிக்கிழமை(7) காலை கோலாகலமாக நடைபெற்றது.

சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 1200 பக்தர்கள்  தீமிதிப்பிலீடுபட்டனர்.

முதலில் ஆலய பிரதமபூசகர் கு.லோகேஸ் பூசகர் எம்.பாஸ்கரன் ஆலயபரிபாலனசபைத்தலைவர் கலாபூசணம் எஸ்.இராமநாதன் செயலாளர் கே.கணேசலிங்கம் உள்ளிட்ட நிருவாகிகளும் தொடர்ந்து ஆண்பெண் பக்தர்களும் தீமிதித்தனர்.

ஆலய வைபவத்திற்கான  பாதுகாப்பை கடற்படையினர் இராணுவம் மற்றும் தொண்டர் அணியினர் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 29ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த தீமிதிப்பு உற்சவம் மதிய இரவுப்பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.