முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவோர் மீது வழக்கு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகளை கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும் என, பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார்.