உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனுக்களை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட குழு

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை  மனு தொடர்பில் பரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை 12  ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.