சருகுபுலி பாய்ந்ததில் தடம்புரண்டு மோட்டார் சைக்கிள் மைல் கல்லில் மோதுண்டதில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை 03.06.2019  இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19), கௌரீஸ்வரன் விதுஷ‪ன் (வயது 20) ஆகியோரே பலியாகியுள்ளனர்.‬

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது கொடுவாமடு எனுமிடத்தைக் கடக்கும்போது சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சருகுபுலியை மோதித் தள்ளி தடம்புரண்டு வீதி மருங்கிலிருந்த மைல் கல்லில் சென்று மோதியுள்ளது.
இதனால் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
இதேவேளை மோட்டார் சைக்கிளால் மோதுப்பட்ட சருகுபுலியும் ஸ்தலத்திலேயே இறந்து கிடந்துள்ளது.
சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
sakthi