மக்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே ராஜினாமா

எவரையும் பாதுகாப்பதற்காக எங்களின் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. மாறாக பாதுகாப்பு  துறையின் விசாரணைகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் இடமளிப்பதில்லை என்ற குற்றம் சுமத்தியமை மற்றும் இது தொடர்பில்  மக்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்கவே பதவிகளை ராஜினாமா செய்தோம்  என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்  கபிர் ஹசீம் தெரிவித்தார்.

 

நாட்டின எதிர்க்காலம் சிக்கல் நிலையை சந்தித்து வருகின்றது. இதனை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால்  எதிர்காலத்தில் பாரிய பிரச்சினை எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்  காணப்படுகிறது. எனவே இவ்வாறான ஒரு சூழ்நிலைமையில் நாங்கள் எவரையும் பாதுகாக்க எண்ணவில்லை. நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்தோம். நாட்டை பாதுக்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.