முனைப்பின் வாழ்வாதாரத்திட்டம் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழிலுக்காக ஆடுகள்.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் தனது
வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பெரிய சிப்பிமடுவை சேர்ந்த கணவனை இழந்த நான்கு  பிள்ளைகளின் தாயான திருமதி காண்டீபன் கிருஷ்ணகுமாரி என்பவருக்கு ஆடுகள் வழங்கிவைத்தனர்.

அதே போன்று  மரப்பாலத்தை சேர்ந்த கணவனை இழந்த நான்குபிள்ளைகளின் தாயான இளவரசன் உதயகுமாரி என்பவருக்கும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த வாழ்வாதார உதவித் திட்டத்தினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் , செயலாளர் இ,குகநாதன் , உறுப்பினர் விஜயகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.