பாசிக்குடாவில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

பாசிக்குடாவில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாசிக்குடா சக்திவாணி ஆயுள்வேத விடுதியில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வுகள் விடுதியின் முகாமையாளர் கே.சிவதாசன் தலைமையில் இன்று புதன்கிழமை(5)காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக ஹோட்டலின் உரிமையாளர் திருமதி. கலைவாணி ரவிச்சந்திரனும்,ஹோட்டலில் முகாமையாளர் கே.சிவதாசன்,மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி வடிவேல்-ஜீவானந்தன்,ஹோட்டலில் கடமையாற்றும் ஊழியர்கள் இணைந்து மரநடுகையை நாட்டி வைத்தார்கள்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம்  “காற்று மாசடைவதை தடுப்போம்”எனும் தொனிப்பொருளில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை முற்றாக ஒழிப்போம் என ஹோட்டலில் கடமையாற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு கண்டனத்தை தெரிவித்தார்கள்.இதன்பின்பு ஹோட்டல் வளாகத்தில் மரநடுகை,ஹோட்டலில் கிடைக்கப்பெறும் கழிவுகளை கொண்டு கூட்டுப்பசளை தயாரிப்பு வேலைத்திட்டமும் நடைபெற்றது.

இதேபோன்று ஹோட்டலை சூழவுள்ள பகுதிகளிலும்,பாசிக்குடா கடற்கரை பிரதேசங்களிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.பிரதேசத்துக்கான அரச நிறுவனங்களின் உதவியுடன் முற்று முழுதாக சுற்றாடலை இயற்கை சூழலாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வேலைத்திட்டத்தை மாவட்டத்தில் முன்னெடுக்க இக்ஹோட்டலிருந்தே வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம் மரநடுகையினால் மனிதன் சுத்தமான காற்றைக் சுவாசிக்க முடியும்.ஹோட்டலில் கிடைக்கும் கழிவுப்பொருட்களை வெளியே வீசாமல் அதனை சேமித்து வைத்து கூட்டுப்பசளை தயாரித்தும்,வளாகத்தில் உள்ள மரங்களுக்கு இட்டும் ,முறையாக மரங்களை பராமரிப்பதும் ஹோட்டலினால் முன்னெடுக்கப்பட்டது.இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவினால் பாசிக்குடா சக்திவாணி ஆயுள்வேத விடுதிக்கு சிறந்த ஹோட்டலுக்கான அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது