உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இளைஞன் பலி.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இளைஞன் பலி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு இருதயபுரம் மத்தியைச்சேர்ந்த செல்வநாயகம் அருன்பிரசாந் என்ற 31 வயது இளைஞன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கடந்த மாதம் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற  கொடிய பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் சிக்கி கழுத்து, மற்றும் முதுகுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக 22.04.2019 திகதி  கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அருண்பிரசாந்த் (சாந்தி)
இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழக உறுப்பினர் என்பதுடன்,  சிறந்த துடுப்பாட்ட வீரர் எனவும் அறியப்படுகிறார்..