வடக்கில் சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்.யாழ்கட்டளைத்தளபதி.

யாழ் கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியுடன் தொலைபேசியில் பேசினேன். யாழிலிருந்து, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, செல்லும்போதும், வரும்போது தெற்கில் இல்லாத அளவுக்கு, பெரும் எண்ணிக்கையில் அடிக்கடி, ஏற்றி இறக்கும் சோதனை கெடுபிடிகள் இருப்பதாக எனக்கு வடக்கில் இருந்து வந்த புகார்களை சொன்னேன்.

தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக கருத்து நிலவுவதாக சொன்னேன். “இல்லை அமைச்சரே, ஐஎஸ் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை.

இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்” என்றார். குறைக்கப்படுகிறதா என பார்த்து சொல்லுங்கப்பா!

அமைச்சர் மனோ  கணேசனின் முகப்புத்தகத்திலிருந்து.