வரலாற்றில் வீரமுனைக்கிராமம் 1கோடிருபா செலவில் அபிவிருத்தி!


வரலாற்றில் முதற்தடவையாக வீரமுனை தமிழ்க் கிராமம் ஒருகோடி ருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேசசபையின் உபதவிசாளருமான வி.ஜெயச்சந்திரனின் அதீத முயற்சியின் காரணமாக இந்நிதி கிழக்கு ஆளுநரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

தனித்து விடப்பட்டதும் பின்தங்கியதுமான எல்லைக்கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ்(Isolated and Vulnerable Boarder Villages Development Programmee(IVBDP))  இந்நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணசபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10கோடிருபா நிதியில் தெரிவுசெய்யப்பட்ட பத்து பிரதேச செயலகப்பிரிவுகளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இதற்கமைவாக சம்மாந்துறைப்பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய தனித்துவிடப்பட்ட வீரமுனைக்கிராம அபிவிருத்திப்பணிகள் தொடர்பான கருத்திட்டத்தினை அடையாளம் காணும் கலந்துரையாடலும் குறித்த வேலைகளை இனம்காண்பதற்கான களவிஜயமும் நேற்று நடைபெற்றது.
வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய முன்றலில் இக்கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேசசபைத்தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட் உபதவிசாளர் வி.ஜெயச்சந்திரன் மற்றும் உதவிதிட்டமிடல்பணிப்பாளர் எ.மஜீட் கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர் சரீப் மொகமட் கிராமஉத்தியோகத்தர் உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களும் கலந்துகொண்டு கருத்துக்க ளைப்பரிமாறினர்.

1990.06.12ஆம் திகதியில் இடம்பெற்ற இனப்படுகொலையால் வீரமுனைதமிழ்க்கிராமம் கபளீகரம்செய்யப்பட்டது. பாரிய நிலப்பரப்பைக்கொண்ட வீரமுனைதமிழ்க்கிராமம் அதன்பின்னர் குறிப்பிடத்தக்க எந்த அபிவிருத்தியையும் காணவில்லை. ஓரிரு லட்சங்களுள் ஓரிருவர் ஒதுக்கிய நிதியுடன் அபிவிருத்தி நின்றுவிடும். ஆனால் முதற்றடவையாக ஒருகோடி ருபா நிதியில் வீரமுனை அபிவிருத்தி காணவுள்ளது.அதற்காக இந்நிதியைக்கொண்டுவந்த அமைப்பாளர் உபதவிசாளர் ஜெயச்சந்திரனை வீரமுனைமக்கள் நன்றியுடன்பாராட்டினர்.

அதேவேளை நிதியை ஒதுக்கித்தந்த கிழக்கு ஆளுநருக்கு அமைப்பாளர் ஜெயச்சந்திரன் அங்கு நன்றி தெரிவித்துரையாற்றினார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வேலைத்திட்டங்களான வீரமுனை சிறுவர்பூங்கா அமைத்தலக்கு 20லட்சருபா மில்லடிவீதி அபிவிருத்தியும் வடிகான்அமைத்தலுக்குமாக 20லட்சருபா அலவாக்கரைவீதி அபிவிருத்தியும் வடிகான்அமைத்தலுக்குமாக 20லட்சருபா மைதானவீதி அபிவிருத்தியும் வடிகான்அமைத்தலுக்குமாக 20லட்சருபா ஆண்டிரசந்தி மற்றும் குறிஞ்சாமுனைவீதி அபிவிருத்திக்காக தலா 10லட்சருபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.