மக்களால் சுமந்து செல்லப்பட்ட அத்துரலியே ரத்தன தேரர்

அத்துரலியே ரத்தன  தேரர் சற்றுமுன்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுநர்கள் அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த தகவலை எடுத்துக்கொண்டு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ரத்தன தேரரை சந்தித்துள்ளார்.
அதனை அடுத்த உண்ணவிரதத்தை முடித்துக்கொண்ட ரத்தன தேரர்  கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலதா மாளிகை வளாகத்தில் அவர் ரத்தன தேரரை சந்தித்து  ஜனாதிபதி தன்னை தொடர்புகொண்டு ஆளுநர்கள் இருவரும் பதவி விலகிய தகவலை கூறச்சொன்னதாகவும் அமைச்சர் ரிஷாத் தொடர்பில் பிரதமரே தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.