திருமலையிலும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உண்ணாவிரதம்

கதிரவன்

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலகவேண்டும் என்தை வலியுறுத்தியும், உண்ணாவிரம் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரேலிய தேரருக்கு ஆதரவு தெரிவித்தும் திருகோணமலையில் இரு வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 2019.06.02 நடைபெற்றது.

திருக்கோணமலை சிவன் கோயில் முன்றலில் வில்வராஜா ஜெயவேந்தன் தேரரி; உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தையும், அலஸ்தோட்டம் இறைஇரக்க ஆலயத்திற்கு முன்னால் எஸ்.பி.ராஜீ கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத்தையும் மேற்கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் இணைந்து கொண்டனர்.