கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பினால் கற்றல் உபகரணங்கள்

கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பினர் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை இன்று வழங்கி வைத்தனர்.

அத்துடன் இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்சியினை விருத்தி செய்யும் முகமாக பிரத்தியேக மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், இதற்கான அனுசரனையினையும் வழங்கி வைத்தனர்.

மேலும் குறித்த பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான செயல்திட்டங்கள் தொடர்பான அறிக்கையினை அதிபரிடம் கோரியிருந்தார்கள்.

பாடசாலை அதிபர் எஸ்.தவநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.அனந்தரூபன், கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் செயலாளர் எஸ்.மங்களதர்ஷன் மற்றும் அழகுக் கலை நிபுணர் திருமதி.சியானி மரியதாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.