6 லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

6 லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வுFeatured

 மே 28, 2019

6 லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் நிகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும்.

அமைச்சர் தயாகமகேயும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் இம்மாதம் 30ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது. 31ஆம் திகதி காலை பத்து மணிக்கு பொலநறுவையில் நடைபெறும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும்.

அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கெக்கிராவ பிரதேச மக்களுக்கு சமுர்த்தி வழங்கப்படவுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்ட யோசனைக்கு அமைய முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் புதிதாக ஆறு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தியை வழங்குவதற்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.