தொப்பிகல காட்டு பிரதேசத்தில் மரம் கடத்தியவர் கைது..

மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டார வன அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காக கொண்டு செலப்பட்ட மரங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரம் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தனிகாசலம் தெரிவித்தார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறித்த காட்டு பிரதேசத்தில் காட்டு மரங்கள் வெட்டப்படுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தமது உத்தியோகஸ்த்தர்கள் சகிதம் சென்று அவற்றினை கைப்பற்றியதாக தெரிவித்தார்.

இதன்போது சந்தேக நபரான உழவு இயந்திர சாரதியும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மரங்கள் அனைத்தும் தேக்கு மரங்களாகும் அவற்றின் பெறுமதி சுமார் 6 இலட்சமாகும். கைப்பற்றப்ட்ட பொருட்களையும் மற்றும் சந்தேக நபரையும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கள் கிழமை (27) ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை 10.06.2019 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அத்துடன் உழவு இயந்திரம், மரங்கள் ஆகியவற்றினை தடுத்து வைக்குமாறும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பஷில் கட்டளை பிறப்பித்துள்ளதாக வட்டார வன அதிகாரி மேலும் தெரிவித்தார்.