மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையம் தீக்கிரை.

மட்டக்களப்பில் சி.சி.ரி.வி.கமராக்கள் விற்;பணை செய்யும் வர்த்தக நிலையமொன்று இன்று (27.05.2019) திங்;கட்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்;பு பொலிஸ் நிலையத்துக்கு பின்பகுதியில் பார் வீதியிலுள்ள முகம்மட் சபீக் என்பவருக்;கு சொந்தமான வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (திங்கட்கிழமை) காலை தனது வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்துள்ளதை கண்டு மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமரசிறீ மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.ஜி.கீத்தா வத்துரு உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த சி.சி.ரி.வி.கமராக்கள் மற்றும் அங்கிருந்த ,இத்திரணியல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளன. முப்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன் கடையில் சிசிரி கமாரா பெருத்தப்பட்ட  பிரதான ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.
இது நாசகார செயலாக இருக்கலாமெனவும் இந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.