ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்ட்து என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் வெற்றிப் பெறுமா, அல்லது தோல்வியடையுமா என்பதை குறிப்பிட முடியாது.

ஆனால் மக்களுக்கு அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளவர்களும், பொருத்தமற்ற அரசாங்கமும் பயனற்றது மக்களின் தரப்பில் இருந்து இவ்விரு நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்குவது எமது கடமையாகும்.

பல அரசியல் தேவைகளை காரணம் காட்டி தவறென்று தெரிந்தும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்களுக்கு எதிராக மக்கள் செயற்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.