கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக கல்விசார் நடவடிக்கைகளின் மீள் ஆரம்ப

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்குமுரிய கல்விசார் நடவடிக்கைகள் எதிர்வரும் 28.05.2019அன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருமலை வளாகத்தின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து மாணவர்களுக்கும் விடுத்துள்ள அறிவித்தலில், குறித்த மாணவர்கள் 27.05.2019 அன்று மாலை 06 மணிக்கு முன்பாக விடுதிகளுக்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடை நிறுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீள அரும்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்குமுரிய முதலாம் ஆண்டு முதலாம் அரையாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்குரிய கல்விசார் நடவடிக்கைகள் எதிர்வரும் 22.05.2019 அன்று மீள் ஆரம்பிக்கப்படட்டிருந்தது.
மேலும் குறித்த நேரத்திற்கு வருகை தராத மாணவர்கள் விடுதிகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். என்பதுடன், மேலதிக விபரங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை பார்வையிடவும்.