நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதத்தை ஒழித்தலுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சாதாரண பெணகளைப் பாதிக்கின்றது. –

சட்டத்தரணி எர்மிநா ரீகல்

நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதத்தை ஒழித்தல் என்பவற்றுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவ்வாறு சாதாரண பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றது  என சட்டத்தரணி எர்மிநா ரீகல் தெரிவித்துள்ளார்.
சமாதானம், அகிம்சை மற்றும் நமத்துவத்திற்கான பெண்கள் வலையமைப்பு இலங்கைளின் இனை;றைய நெருக்கடி நிலையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அவர்களது அக்கறைகள், கருத்துக்கள்  ஆகியவற்றை எடுத்துக் கூறுவதற்கான பத்திரிகையாளரது மகாநாடு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இவ் சமாதானத்திற்கான பெண்களின் ஊடக மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இப்பத்திரிகை மகாநாட்டை பெண்கள் ஊடகக் கூட்டமைப்பைச் சேர்ந்த குமுதினி சாமுவல் அவர்கள் வழிநடத்தினார்.

இதில் சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான டில்ருக்ஷி ஹந்துனெத்தி, சட்டத்தரணி எர்மிநா ரீகல், பேராசிரியை சித்ரலேகா மொனகுரு, ஜனகலன சமாஜ அமைப்பைச் சேர்ந்த அருட்சகோதரி நொயல் கிறிஸ்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதத்தை ஒழித்தல் என்பவற்றுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவ்வாறு சாதாரண பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றது எனக் கூறிய எர்மினா ரீகல் இவை தொடர்பான சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்தார்.

அத்துடன் அவசரகால நிலை சட்டம் நீடிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். நாட்டினது நெருக்கடி நிலையைப் பாவித்து தத்தமது சமூகங்களை பிளவுபடுத்த முயலும் சக்திகள் பற்றிய விமர்சனத்தை புத்திஜீவிகள், சமூக செயல்வாதிகள், கலைஞர்கள், சமய நிறுவனங்கள் முன்வைத்து செயற்பட வேண்டும் என்றார்.
நீர்கொழும்பில் தங்கியிருந்த, பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சட்டபூர்வமான புகலிடக் கோரிக்கையாளரை எமது சமூகங்கள் வெறுப்புடன் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனச் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு அவர்கள் கூறினார்.

அது மாத்திரமன்றி பூந்தோட்ட முகாமிலும் யாழ்ப்பாணத்திலும்  தங்கவைக்கபட்ட குடும்பங்களை அங்கும் இங்குமாகத் துரத்தும் தமிழ்ச் சமூகம்  தாம் வெளிநாட்டில்  புகலிடம் கோருவதையோ முள்ளிவாய்க்காலிலிருந்து வந்து வவுனியா முகாம்களில் தங்கியிருந்த போது பட்ட அவலங்களையோ மறந்து விட்டனரா என கேள்வியெழுப்பினார்.
அருட்சகோதரி கிறிஸ்டின் எமது கல்விமுறைமை பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். இனத்துவப்பிளவுகளுக்கு வழிவகுக்கும் கல்வி நீக்கப்பட வேண்டும் என்றார். ஊடகங்கள், ஊடக நெறிமுறையிலிருந்து  தவறியுள்ளனர் என குறிப்பிட்ட டில்ருக்ஸி ஹிந்துநெத்தி எவ்வாறு இனங்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த சிங்கள தமிழ் ஊடகங்கள் பங்காற்றின என்பதைக் கடந்த பத்தாண்டு வெளிப்பட்டது என்றார்.
வழக்கமாக வருகின்ற பிரதான நிருபர்களை விட இணையத்தள ஊடகவியலாளர்களான இளம் பெண்கள் இம் மகாநாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.