கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது

மட்டக்களப்பு  – வவுணதீவு பொலிஸ் பிரிவில்  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

வவுணதீவு பிரதேசத்திலுள்ள கொத்தியாபுலை காட்டுப் பகுதியில் பொலிஸாரால் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்கள் உட்பட கசிப்பு கொள்கலன்கள், போத்தல்கள், பரல் மற்றும் கோஸ் சிலின்டர் உள்ளிட்ட பொருட்களுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்சஜித் ரத்நாயக்கே, சாஜன் சந்திரரத்ன வண்டார, சாஜன் நஸீர், சாஜன் மஹிந்த, பொலிஸ் கான்டபிள் தினேஸ், ஜெயவிக்ரம, எஸ்.கோபிநாத், சுகந்தன், லோஜி,கசந்த உள்ளிட்ட பொலிஸாரே இந் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.