சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் திங்கட்கிழமை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பிரதி பதிவாளர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நான்காம் வருடம் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பிரதி பதிவாளர் தெரிவித்துள்ளார்.