அறபுமொழியில் பதாகைகள் காணப்பட்டால் உடன் அகற்றவும்.சுற்றுநிருபம் வருகின்றது.

தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கிவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றுநிருபம் சகல அரச அதிகாரிகள் மற்றும் மாகாண சபை தலைவர்கள் ஆகியோருக்கு வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைத் தவிரவுள்ள எந்தவொரு மொழியிலும் அறிவித்தல் பலகைகள் அமைக்கப்படக் கூடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.