ஜனாதிபதியும் பிரதமரும் போட்டியிட்டு ஆளுனர்களையும் அமைச்சர்களையும் பாதுகாக்கின்றனர்

குண்டுத்தாக்குதலை தொடர்ந்து  பல்வேறு  தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி  ஆகியேரை  ஜனாதிபதியும்,  அமைச்சர் ரிஷாத் பதியுதீனை  பிரதமரும் போட்டிப் போட்டுக் கொண்டு பாதுகாக்கின்றார்கள் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, நாடு இன்று எதிர்க் கொண்டுள்ள நெருக்கடிகள் அனைத்திற்கும் இரண்டு  அரச தலைவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அமைச்சர் ஒருவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கியுள்ள  குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற தெரிவுக் குழு நியமித்துள்ளமை  இதுவே முதல் முறையாக காணப்படுகின்றது.

எதிர்வரும்மாதம் 18-19 ஆம் திகதிகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு  எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடைப்பட்ட காலத்தில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்தவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தின் ஊடாக திசை திருப்பி விடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.