கிரிக்கெட் அலுவலகம் திறப்பு திருகோணமலை

கதிரவன் திருகோணமலை

திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம் தனது அலுவலகத்தை நீதிமன்ற வீதியில் புதன்கிழமை 2019.05.22 மாலை திறந்து வைத்துள்ளது. 1994ம் வருடம் இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இருந்த போதிலும் அலுவலகம் இன்றியே இதுவரைகாலமும் செயற்பட்டு வந்தது. சங்கத்தின் தலைவர்  பா.வசந்தகுமார் எடுத்த முயற்சியின் காரணமாக இது கைகூடியது.
13 கழகங்கள் இதில் அங்கத்துவம் வகிக்கி;றன.
திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் தலைவர் பா.வசந்தகுமார், கிழக்கு மாகாண கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் சிதத் ஆகியோர்  இணைந்து அலுவலகத்தின் பெயர் பலகையை திரை நீக்கம் செய்வதையும். அலுவலத்தை நாடா வெட்டி திறந்து வைப்பதையும் படங்களில் காணலாம்.

அலுவலகம் திறப்பின் நினைவாக கழகங்களுக்கு நினைவுச் சின்னங்களும், விளையாட்டு உகரணங்களும் வழங்கி வைக்கப்;பட்டது.