சமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள்

 (News 1st)

சமூக வலைத்தளங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சிரச ரீவியில் நேற்றிரவு ஔிபரப்பாகிய ‘சட்டன’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், 9 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.