ஐ.எஸ். பயங்கரவாதிகள் “சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர்

கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தன . இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ. எஸ் அமைப்பால் தயாரிக்கப்பட்ட “சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர். (TATP, chemically known as triacetone triperoxide, an explosive made from commonly available household ingredients including nail polish remover – acetone – and hydrogen peroxide)இதனால் இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது.

பாரிஸில் நடந்த 2015 தற்கொலை தாக்குதல், 2017-ல் இங்கிலாந்தில் மன்செஸ்டர் அரினா தாக்குதல், இந்தோனேசியாவில் ஒரு வருடத்திற்கு முன்பு தேவாலயங்களில் தாக்குதல்களில் இந்தவகை வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டன .

Thanks

thamilan news