மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு.

மட்டக்களப்பு நகரில் கடந்த 2 1 ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மரணித்தவர்களினை நினைவு கூர்ந்து அஞ்சலிநிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நேற்று( 21) நடைபெற்றது.

இந்த நினைவு தினத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் காயமடைந்தவர்களுக்கு பூரண சுகம் ஏற்படவும்வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு செயலக சித்திவிநாயகர்ஆலய சிவஸ்ரீ ஜேகதீஸ்வரகுருக்கள்,ஜாமியுஸ் சலாம் ஜூம்மாபள்ளிவாயல்,மட்டக்களப்பு பேஷ்இமாம் மௌலாவி எம்.எல்.எம்.நியாஸ் மற்றும் மாவட்டசெயலக மேலதிகஅரசாங்க அதிபர்திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,காணிப்பிரிவு மேலதிகஅரசாங்க அதிபர்திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன்உட்பட பலஉத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.