கொக்கட்டிச்சோலையில் சுடரேற்றி நினைவேந்தல்.

பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதலினால் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி கொக்கட்டிச்சோலையில் இன்று(21) மாலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, உயிர்நீத்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி, சுடர்ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு இயேசு சபைத் துறவி ஜேசெப் மேரி அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில், இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் கலந்;துகொண்டு தமது இரங்கல்களை தெரிவித்தனர்.

இதன்போது தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.