க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு பாடசாலை மட்டத்திலும், தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

 

இம்முறை டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரச சேவையிலுள்ள அலுவலர்கள் தற்போதுள்ள முறைமைக்கமைவாக தமது விண்ணப்ப படிவத்தினை கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்த இயலாத சந்தர்ப்பத்தில் உரிய நிறுவனத்தலைவர் மூலமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் தொடர்பான மேலதி தகவல்களை 011-2784208, 011-2784537, 011-3188350 மற்றும் 011-3188350 என்ற பாடசாலை பரீட்சைககள் ஒழுங்கமைப்பு பெறுபேற்றுக்கிளை இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.அல்லது 1911 என்ற அவரச தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.