மீண்டும் ஒரு கருப்பு ஜூலையை இந்த நாட்டில் அனுமதிக்க மாட்டேன்

பெருந்தோட்ட கைததொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

இந்த நாட்டில.;  1983 ஆம் அண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கபட்டு  அதன் விளைவுகளை சந்தித்து கஸ்டங்களை அனுவித்தவன் என்ற ரீதியில் மீண்டும் ஒரு கருப்பு ஜூலையை இந்த நாட்டில் உறுவாக நான் அனுமதிக்க மாட்டேன். இதற்கு யாரும் உறுதுணையாக செயற்படுவர்களை நான் வண்மையாக கண்டிக்கின்றேன். 1985 இனக்க கலவரம் காரணமாக எமது சொந்தங்கள் இந்தியா நோக்கி சென்றனர் அதே போல் முஸ்லிம் மக்கள் மீது இனக்கலவரம் தினிக்கப்பட்டு அவர்களும் முஸ்லிம் நாடுகளை நோக்கி செல்லும் நிலை இந்த நாட்டில் உறுவாக கூடாது அதற்கும் நான் அனுதிக்க மாட்டேன் என்று கூறுகின்றார் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் அவர்கள்

மகா கும்பாஹபிசேஹம் நடைபெற்ற பதுளை மாவட்;டம் ஊவாபரணகம பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பஹா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு நிதி உதவி¸ வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட தோட்ட இளைஞர்கள் கலந்துக் கொண்டனர் (22.05.2019)
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து  தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்
1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தை நான் மரவேன் இதனால் எமது பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கபட்டனர் சொந்துக்கள் தீயிட்டு சேதமாக்கபட்டது மட்டுமல்லாது கலவாடவும்பட்டன. பல உயிர்கள் எம்மைவிட்டு போனது. பல்லாயிர கணக்கானோர் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தனர். ஆயிரகணக்கானோர் இலங்கையிலேயே வடகிழக்கு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அங்கு நடைபெற்ற 30 வருட கொடூர யுத்ததில் பாதிக்கபட்டு செத்து மடிந்தனர். தற்போதும் இந்த யுத்ததால் பாதிக்கபட்ட மக்களின் வடுக்கள் ஆரவில்லை. இதனால் இந்த நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தும் முடக்கபட்டு நாட்டின் அபிவிருத்திகள் பாரிய பின்னடைவை நோக்கியுள்ளது.
தற்போது இ;ந்த கொடூர யுத்தத்திற்கு ஒரு சரியான தீர்வு காணப்பட்டு இந்த நாடு அபிவிருத்தி பாதையில் நல்லாட்சி நடைபெரும் வேலையில் சில இனவாத விசமிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இது தொடருமானால் நாடு பாதாளத்தை நோக்கி செல்லும். இனவாதம தலைவிரித்து ஆடும். எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களுக்கான சிறந்த அழகான அபிவிரத்தி அடைந்த நாடாக இந்ந இலங்கை நாடு இருக்க நாம் அனைவரும் செயற்பட வேண்டும்
இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. இது ஜனநாயக நாடு. ஒரு சிலர் செய்த பிழையான விடயத்தை வைத்துக் கொண்டு மொத்ததில் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தப்பாக பார்க்க கூடாது. தற்போது நாட்டில் இந் நிலை ஏற்பட்டு உள்ளது பொது இடங்களில் அவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கின்னறனர் இது கலையப்பட வேண்டும். இந்த நாடு ஒரு பௌத்த நாடு இதில் ஏனைய மதங்கள் இனங்கள் எல்லாம் சகோதரர்களை போன்றது பௌத்த மதம் எங்களது பெரிய அண்ணன் எனைய அனைத்து மதங்களும் தம்பிமார்கள். இந்நிலையில் ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் இருப்பது போல் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்வோம் என்று கூறினார்.